Thursday, July 3, 2025

சரவண பவன் வழக்கை பற்றி சூடா ஒரு படம்

வெளியானது முதலே பரபரப்பாக பேசப்பட்டு வந்தது மட்டுமில்லாமல் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று, பல விருதுகளை வாங்கி குவித்துள்ள படம் ஜெய் பீம்.

இப்படத்தை இயக்கிய டிஜே.ஞானவேல், ஒரு உண்மை சம்பவம் தொடர்பான சட்ட போராட்டத்தை தனது அடுத்த படமாக இயக்க உள்ளார்.

சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால், தன்னிடம் பணியாற்றும் பிரின்ஸ் என்பவரின் மனைவி ஜீவஜோதியை மூன்றாவது திருமணம் செய்து கொண்டால் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்ற ஜோதிடரின் கணிப்பை நம்பி, ராஜகோபால் பிரின்ஸை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

பின், ராஜகோபாலை எதிர்த்து ஜீவஜோதி நடத்திய சட்ட போராட்டத்தின் விளைவாக 2019ஆம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. எனினும், தீர்ப்பு வந்த மூன்று நாளைக்குள்ளாக ராஜகோபால் மாரடைப்பால் உயிரிழந்தார்.

இந்த வழக்கு கடந்து வந்த பாதையை, ஒரு செய்தியாளராக கவனித்து வந்ததாக கூறும் ஞானவேல், அந்த அனுபவத்தின் உதவியுடன், இந்த சம்பவத்தை வித்தியாசமான கோணத்தில் காண்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news