“எமன்யின்  கோவில்” – இங்கு போகவே பயந்து நடுங்கும் ஊர் மக்கள்

317
Advertisement

மக்கள் வருவதைத் தவிர்த்து, பெயரைக் கேட்டாலே ஓடிவிடும் உலகின் தனிச்சிறப்பு வாய்ந்த கோவிலை பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கோவிலுக்கு செல்வது அவர்களின் வேதனை , கஷ்டங்கள் தீரும் என்ற நம்பிக்கையில் தான்.

ஆனால் இந்தியாவில் உள்ள இந்த கோவியலுக்கு சென்றால், உயிர் பறிபோகிவிடுமோ என அஞ்சுகின்றனர். இந்த கோவில் சம்பாவில் உள்ள பார்மோர் என்ற சிறிய நகரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் பார்வைக்கு மிகவும் சிறியதாக இருந்தாலும் அதன் புகழ் எங்கும் பரவியுள்ளது.

இந்த கோயில் மரணத்தின் கடவுளுக்கு சொந்தமானது என கூறுகின்றனர் அப்பகுதி மக்கள் . இதனால் கோவிலுக்கு செல்லவே மக்கள் அஞ்சுகின்றனர். உலகிலேயே எமதர்மராஜனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரே கோயில் இது தான் என்கின்றனர்.இக்கோயிலில் சித்ரகுப்தருக்கு ஒரு அறையும் உள்ளதாம்.அவர்  மக்களின் தீய செயல்களைப் பற்றி கணக்கு வைக்கிறார்.

மற்றும்  இந்த கோவிலில் தங்கம், வெள்ளி, செம்பு மற்றும் இரும்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட நான்கு கதவுகள் மறைக்கப்பட்டுள்ளன எனவும் அதிக பாவமுள்ள மனிதனின் ஆன்மா இரும்பு வாசலுக்குச் செல்லும் என்று கூறப்படுகிறது.

அறம் செய்தவனின் ஆன்மா பொன் வாசல் உள்ளே செல்கிறது. அதாவது யாருக்கு சொர்க்கம், யாருக்கு நரகம் என்று சித்ரகுப்தன் தான் முடிவு செய்கிறான் என நம்புகின்றனர் இப்பகுதி மக்கள்.இதனால் உள்ளே சென்றால் எமன்  தங்கள் உயிரை பறித்துவிடுவாரோ என்று மக்கள் பயப்படுகிறார்கள்.