தாய்லாந்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை குறைக்க, அந்நாட்டு அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டு வரவுள்ளது.
2013ஆம் ஆண்டில் இருந்து 2020ஆம் ஆண்டு வரை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 16,413 பாலியல் குற்றவாளிகளில், 4,848 நபர்கள் திரும்பவும் அதே குற்றங்களில் ஈடுபடுவதை அறிந்த அரசு, இது போன்ற சம்பவங்களை தடுக்க புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, ஆண்மைக்கு காரணமான டெஸ்டோஸ்டெரோன் (Testosterone) என்னும் ஹார்மோனை ரசாயன முறையில் குறைத்து கொள்ள பாலியல் வழக்கு கைதிகள் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில், அவர்கள் சிறையில் இருக்க வேண்டிய காலத்தை குறைக்கும் சட்டம் தற்போது பரிசீலனைக்கு வந்துள்ளது.
எனினும், அவ்வாறு விடுவிக்கப்படும் கைதிகள் 10 ஆண்டுகளுக்கு அரசு வழங்கும் மின்சார கண்காணிப்பு braceletஐ அணிந்து கொள்ள வேண்டும் எனவும், அவர்களின் நடவடிக்கைகள் உன்னிப்பாக கவனிக்கப்படும் என்றும் தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.