“திருமணத்திற்கு முன் தாயாகவேண்டும்” வினோத கலாச்சாரம்- இந்தியாவில் எங்கு தெரியுமா ?

282
Advertisement

பொதுவாக  நம் சமூகத்தில் திருமணத்திற்கு முன் தாயாக இருப்பதோ அல்லது குழந்தையைப் பெற்றெடுப்பதோ பாவமாகக் கருதப்படுகிறது. ஆனால், நம் நாட்டில் உள்ள ஒரு  கிராமத்தில் பெண்களுக்கு திருமணத்திற்கு முன் குழந்தை பிறக்க வேண்டும், அவர்கள் தாயாக வேண்டும் எனபது கட்டாயம் என்று உங்களுக்கு தெரியுமா ?

வாங்க எங்கே என்று பார்ப்போம்…..

 ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள சிரோஹி மற்றும் பாலி கிராமங்களில் வசிக்கும் கராசியா (Garasia) பழங்குடியினர் தான் இந்த  தனித்துவமான பாரம்பரியத்தை பின்பற்றி வருகின்றனர். இந்த பாரம்பரியம் சுமார் 1000 வருடங்கள் பழமையானது என்று கூறுகின்றனர் .

கார்சியா பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்கள் திருமணம் செய்வதற்கு முன் குறைந்தது ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும். இதில் விசேஷம் என்னவென்றால், சட்டவிரோதமாக  ஆண்களும் பெண்களும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்கிறார்கள். குழந்தைகள் பிறந்த பிறகு சட்டப்படி திருமணம்  செய்துகொள்கிறார்கள்.

கார்சியா பழங்குடியினர் ஒவ்வொரு ஆண்டும் 2 நாள் விழா ஒன்றை நடத்துகின்றனர். இந்த விழாவில், ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் தேர்ந்தெடுத்து தங்கள் குடும்பத்தினரின் அனுமதியின்றி ஒன்றாக வாழ்கின்றனர். கார்சியா பழங்குடியினக் குழந்தைகளுக்குத் தங்கள் துணையைத் தேர்ந்தெடுக்க முழுச் சுதந்திரம் உள்ளது என்பது சிறப்பு.குழந்தை பெற்றெடுத்தபின் திருமணம் செய்திகொள்கிறார்கள்.மாறாக திருமணத்திற்கு முன் தாய் இல்லாதவர்கள் அசுபமாக கருதப்படுவார்கள் என்கின்றனர் உள்ளூர்வாசிகள்.