நாய்களைக் குழப்பத்தில் ஆழ்த்திய எலியின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
நியூயார்க் நகரில் உள்ள நாய்களுக்கான பூங்கா ஒன்றில் நாய்கள் கூட்டத்தின் நடுவே எலி
ஒன்று பாய்ந்தது. இதனால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. நாய்கள் அந்த எலியைப் பிடிக்க
முயன்றன. ஆனால், அவற்றிடமிருந்து குறுக்கும் மறுக்குமாக ஓடி நாய்களைக் குழப்பியது எலி.
அதேசமயம், நாய்களின் உரிமையாளர்களும் எலியைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனால், தவிப்பில் ஆழ்ந்தன நாய்கள். கடைசியில் எலி தப்பியோடி விட்டது.
அண்மையில் நிகழ்ந்த வேடிக்கையான இந்த சம்பவம் தற்போது நெட்டிசன்களுக்கு கலகலப்பூட்டி
வருகிறது.