https://www.instagram.com/reel/Cb8MyZ7lme1/?utm_source=ig_web_copy_link
இளைஞர் ஒருவர் தனது 2 தோள்களிலும் 2 ராட்சத மலைப்பாம்புகளைத்
தொங்கவிட்டபடி நடனமாடிய வீடியோ இணையதளவாசிகளை
அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.
இந்தோனேஷியாவைச் சேர்ந்த அந்த இளைஞர் தனது ட்டுவிட்டர் பக்கத்தில்
தன்னுடைய இந்த அசாத்திய சாதனை வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
2 பாம்புகளை அதுவும் மிக நீண்ட, மிக கனமான ரெட்டிகுலேட்டட் இன
மலைப்பாம்புகளைத் தனது தோள்களில் தொங்கவிட்டபடி நடனமாடி
காண்போரின் கண்களை விரியவைத்துள்ளார அந்த இளைஞர்.
ரெட்டிகுலேட்டட் பாம்புகள் 20 அடி நீளத்துக்கும் அதிகமாக வளரும்
என்கிறார்கள் விலங்கியல் நிபுணர்கள்.
மலைப்பாம்புகள் விஷமற்றதாகக் கருதப்பட்டாலும் அவை மற்ற
உயினங்களையும் மனிதர்களையும் கடித்துவிழுங்குகின்றன. அதனால்
பாம்பென்றாலே பறந்தோடிவிடுவோம். இந்த தைரிய இளைஞரோ
துண்டைத் தோளில்போடுவதுபோல பாம்புகளைத்தோளில் போட்டு
அசத்தியுள்ளார்.
பொதுவாக, எந்த வகைப் பாம்பாக இருந்தாலும் ஜந்துகள் மட்டுமன்றி,
மனிதர்களும் பயத்தில் உறைந்துபோவார்கள். மிக அரிதாக, பாம்பு பிடி
வீரர்கள் மட்டுமே பாம்பைக் கண்டால் தைரியமாக எதிர்கொள்வார்கள்.
சிலவேளைகளில் குழந்தைகள்கூட பாம்பைக்கண்டு பயம்கொள்ளாமல்
அவற்றோடு விளையாடும் வீடியோக்களைப் பார்த்து அதிசயித்திருக்கிறோம்.
ஆனால், இந்த இந்தோனேஷிய இளைஞரின் செயல் அச்சத்தோடு ஆச்சரியத்தையும்
ஏற்படுத்தி வருகிறது.