Monday, July 7, 2025

சிக்கன் சாப்பிடலனா Protein கிடைக்காது

மாமிச உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பதே ஆரோக்கியமான உணவு பழக்கம் என நினைத்து பலரும் சைவ உணவிற்கு மாறி வருகின்றனர்.

அதிலும், சிலர் மாமிச உணவுக்கு பதிலாக சோயா மீட் போன்றவற்றை சாப்பிட்டு, உடலுக்கு தேவையான புரதத்தை சரியான முறையில் பெற்று விட்டதாக திருப்தி அடைந்து கொள்கிறார்கள்.

Journal Of Agricultural and Food Chemistry என்னும் ஆய்வு பத்திரிகையில், அண்மையில் வெளியான  கட்டுரையில், அசல் கோழிக்கறியில் உள்ள புரதத்தை போல, செயற்கையான கறியில் உள்ள புரதத்தை நம் உடலால் உள்வாங்க முடியவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

செயற்கையான கறியில் நம் உடலுக்கு தேவையான ஒமேகா 3 கொழுப்பு சத்துக்களும் கிடைக்க வாய்ப்பில்லை.

மேலும், செயற்கையான கறியில் சுவை கூட்ட மற்றும் நீண்ட நாள் கெட்டு போகாமல் இருப்பதற்காக சேர்க்கப்படும் ரசாயன பொருட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என கூறும் மருத்துவர்கள், சரியான அளவில் மாமிச உணவுகளை உணவில் சேர்த்து கொள்வதே சீரான ஊட்டச்சத்தை பெறும் வழி என கருத்து தெரிவிக்கின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news