கால்பந்து விளையாட்டு மைதானத்துக்குள் புகுந்த நாயின்
செயல் இணையதள வாசிகளுக்கு கலகலப்பூட்டி வருகிறது.
பிரேசில் நாட்டின் 121 ஆவது கால்பந்து சீசன் தற்போது
அங்குள்ள ரிஷைபில் நகரில் நடைபெற்று வருகிறது.
பிரேசிலின் மாநில சாம்பியன்ஷிப்புக்கான இந்தப்
போட்டியில் நாட்டிகோ அணியும் ரெட்ரோ அணியும்
விறுவிறுப்பாக மோதிக்கொண்டிருந்தன.
இரண்டாவது பாதி ஆட்டம் நடந்துகொண்டிருக்கும்போது
திடீரென்று ஒரு போலீஸ் நாய் மைதானத்துக்குள் புகுந்து
அங்கும் இங்கும் ஓடியது. அதைப் பார்த்து முதலில் வீரர்கள்
குழம்பினாலும், பின்னர் அமைதியாக இருந்தனர்.
பின்னர், அந்த நாயைப் பிடிக்க முயன்றபோது அந்த நாயோ
பாய்ந்து பாய்ந்து ஃபுட்பாலைப் பிடிக்கமுயன்றது.
ஜெர்மன் ஷெப்பர்ட் இனத்தைச் சேர்ந்த அந்த நாய் இறுதியாகக்
கால்பந்தை வாயில் கவ்வியது. கவ்விக்கொண்டு சில நிமிடங்கள்
மைதானத்திற்குள் வலம்வந்தது. அப்போது வேறொரு பந்தைக்
காண்பித்து ஏமாற்றிய பிறகே தனது வாயிலிருந்த பந்தை கீழே
போட்டது. அதன்பிறகு அந்த செல்லப்பிராணி வெளியே அழைத்துச்
செல்லப்பட்டது.
கால்பந்து மைதானத்துக்குள் அதிரடியாகப் புகுந்து வீரர்களை
சிறிதுநேரம் குழப்பத்தில் ஆழ்த்திய அந்த நாயின் செயல் நாய்ப்
பிரியர்களையும் விளையாட்டு வீரர்களையும் மகிழ்ச்சியில்
ஆழ்த்தியது.
ட்டுவிட்டரில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ தற்போது சமூக
ஊடகங்களில் வைரலாகி வருகிறது.