தண்ணீருக்குள் தத்தளித்த அணிலை நாய் காப்பாற்றிய
வீடியோ சமூக ஊடகத்தில் பகிரப்பட்டு வருகிறது.
அணில், எலி போன்றவற்றைக்கண்டால், அவற்றை
வேட்டையாடி உண்பது நாய்களின் பொதுவான குணம்.
ஆனால், ஆபத்தில் சிக்கிய அணிலை உயிரோடு காப்பாற்றித்
தனது மேன்மையான குணத்தை வெளியுலகுக்குக் காண்பித்துள்ளது
ஒரு நாய்.
இதுதொடர்பாக ட்டுவிட்டர் பக்கத்தில் வெளியான வீடியோ ஒன்றில்,
படகிலிருந்த நாய் ஒன்று ஏரியில் குதித்து, அங்கு தத்தளித்துக்
கொண்டிருந்த அணிலைத் தனது முகத்தில் சுமந்து நீந்தி வந்து
காப்பாற்றியுள்ளது.
இதயத்தை வருடும் இந்தக் காட்சி செல்லப்பிராணியின்
குணத்துக்கு மகுடம் சூட்டுவதுபோல அமைந்துள்ளது.
ஆபத்துக் காலத்தில் உதவுபவர்களே உண்மையான நண்பர்கள்
என்று சொல்வார்கள். ஆனால், தனக்கு உணவாகக்கூடிய
உயிரினத்தைக்கூட, ஆபத்து நேரத்தில் காப்பாற்றி, உயிர்
காப்பான் உற்ற தோழன் என்ற மெய்க்கூற்றைவிட மேலானதாகியுள்ள
செல்லப்பிராணியின் செயல் பலருக்கும் பாடம் போதிப்பதாக அமைந்துள்ளது.