பூமியை சூரியப் புயல் தாக்கவுள்ளதாகத் தகவல்கள்
வெளியாகியுள்ளன. இதனால், சூரியனைச் சுற்றிவரும்
சில சிறிய செயற்கைக் கோள்கள் சிதறி பாதிப்பை
ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படுகிறது.
மார்ச் மாதம் 11 ஆம் தேதி சூரியனில் சூரிய ஒளி வெடிப்பு
ஒன்று ஏற்பட்டது. இந்த வெடிப்பு விண்வெளிக்கு நேரடியாக
ஆற்றலை அனுப்பியது. அதைத் தொடர்ந்து மார்ச் 13 ஆம்
தேதி பூமியை சூரியப் புயல் தாக்கப்போவதாகக் கூறப்பட்டுள்ளது.
விநாடிக்கு 600 கிலோமீட்டர் வேகத்தில் அந்த ஆற்றல்
இருந்துள்ளது. பூமியை எதிர்கொள்ளும் சூரியனின் பக்கத்தில்
அந்த வெடிப்பு நிகழ்ந்ததால் அந்தப் புயல் ஏற்பட்டுள்ளதாக
நாசா தெரிவித்துள்ளது.
ஆனால், இது சிறிய புயல் என்பதால், அதன் தாக்கம் வடக்கு
அல்லது தெற்கு அடிவானத்துக்கு அருகிலுள்ள அரோரா பகுதியில்
இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
சூரியப் புயல்களை ஜி1, ஜி2, ஜி3, ஜி4, ஜி5 என்று வகைப்படுத்து
கிறார்கள் விஞ்ஞானிகள்.
சூரியப் புயல் ஜி1 அல்லது ஜி2 என்ற
அளவில் இருப்பதால், அது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது
என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.