Thursday, December 26, 2024

முன்னாள் அமைச்சரின் கலக்கல் டான்ஸ்

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணியின்
ஒயிலாட்டம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொங்குப் பகுதியில் ஒயிலாட்டம் பிரபலம். எந்தத்
திருவிழாவாக இருந்தாலும் ஒயிலாட்டம் கண்டிப்பாக
இடம்பெறும்.

அந்த வகையில் கோயம்புத்தூர், சூலூர் அருகே கணியூர்
பகுதியிலுள்ள கோவில் திருவிழாவில் சிறப்பு விருந்தினராகக்
கலந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி
ஒயிலாட்டம் ஆடி அனைவரையும் வியக்கவைத்துவிட்டார்.

நடனக் குழுவினருடன் இணைந்து அவர் ஆடியது வலைத்
தளங்களில் வேகமாகப் பரவியது.

ஒயிலாட்டம் என்பது ஒரே நிறத்துணியைத் தலையில்
கட்டிக்கொண்டு, கையில் ஒரே நிறத்தினாலான துணியை
வைத்துக்கொண்டு இசைக்கேற்ப வீசி ஆடும் அழகான
ஆட்டமாகும். பெரும்பாலும் ஆண்களே ஒயிலாட்டத்தை
ஆடிவருகின்றனர்.

அமைச்சராக இருந்தபோதும் ஒயிலாட்டம் ஆடிய வேலுமணி,
தற்போது தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்ஏ ஆக இருக்கும்
போதும் ஆடி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று
அனைவரையும் கவர்ந்துவிட்டார்.

அண்ணனின் ஆட்டம் சூப்பர் என்று வேலுமணியின் கலைத்
திறனைப் பாராட்டி வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து
வருகின்றனர் நெட்டிசன்கள்.

Latest news