Tuesday, March 11, 2025

கற்றுக்கொடுத்தது யாரோ?

செல்லப் பிராணி வரிசையில் காகம் இல்லாவிட்டாலும்,
முன்னோர்களாகக் கருதி அதற்கு உணவளிப்பது நமது வழக்கம்.

உணவை உயரமான இடத்திலோ சுவரிலோ வைத்துவிட்டுச்
சென்றால், தேடிவந்து உட்கொள்கிறது காகம்.

பொதுவாக, காகம் கரைந்தால் நம் வீட்டுக்கு வருவர் என்பது
பலரின் நம்பிக்கையாக உள்ளது. ஆனால், காகம்
அவசரப்படாமல் பொறுமையாக சிந்தித்து மனிதர்களைப்போல
செயல்படுகிறது.

சுயமாக சிந்தித்து செயல்படுகிறது காகம். தான் மட்டும் உண்டது
மட்டுமன்றி, தன்னோடு சேர்ந்த காகம் வேறிடத்தில் இருந்தாலும்
அதற்கும் கொண்டுசென்று ஊட்டுகிறது.

இந்தச் செயல்,ஆறறிவு கொண்ட மனிதர்களுக்கு மட்டுமன்றி
ஐந்தறிவுகொண்ட காகங்களுக்கும் சிந்திக்கும் திறன் உள்ளதாகவே
நம்பவேண்டியுள்ளது.

அறிவுத் திறன் கொண்ட காகத்தின் இந்த செயலைப் பார்த்துக்
கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கின்றன.

Latest news