Friday, December 27, 2024

யானைக்கு சிறை

மனிதர்கள் தப்பு செய்தால் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதிக்கும்.
தப்பு செய்தவர்கள் தங்களின் தவறை உணர்ந்துகொள்ளவும், எதிர்காலத்தில்
தப்புசெய்யாமல் வாழவும் தண்டனைக் காலம் ஒரு வாய்ப்பாக அமையும்.

ஆனால், யானை ஒன்று சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட விநோதத்
தீர்ப்பு சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளது.

யானை ஒன்றுக்கு தண்டனை விதிக்கப்பட்டு 5 மாதக் காலம்
சிறைவைக்கப்பட்டுப் பிறகு மனம் திருந்தியதால் ரிலிஸ் செய்யப்பட்ட
விவரமும் மூக்கின்மேல் விரலை வைக்க வைத்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கொளப்பள்ளி அரசு தேயிலைத் தோட்டத்தில்
3 பேரைக் கொன்றது சங்கர் என்ற காட்டுயானை. அதுமட்டுமல்லாமல்,
ஓராண்டுக்குமேல் அப்பகுதி மக்களையும் அச்சுறுத்தி வந்தது.

யானையின் அட்டூழியத்தைக் கண்டு அச்சமடைந்த அப்பகுதிவாசிகள்
வனத்துறையிடம் புகார் செய்ய, துப்பாக்கிமூலம் மயக்க மருந்து செலுத்தி
அரெஸ்ட் செய்தனர்.

பின்னர், முதுமலை யானைகள் முகாமிலுள்ள மரக்கூண்டில் அடைக்கப்பட்டது.
5 மாதங்கள் மரக்கூண்டில் சிறைவைக்கப்பட்டிருந்த யானை சங்கருக்கு
பாகன்கள் நன்கு பயிற்சியளித்தனர். பசுந்தளைகள் உள்ளிட்ட யானைக்கு
விருப்பமான உணவுகள் வழங்கப்பட்டது.

சிறையிலிருந்தபோது சங்கரின் மூர்க்கத்தனம் நீங்கி சாந்தமாக மாறியது.
அதன்பலனாகப் பாகன்களின் கட்டளைக்குக் கீழ்ப்படியத் தொடங்கிய சங்கரை
விடுதலை செய்தனர்.

விடுதலையான சங்கரை மாலையிட்டு வரவேற்றதுடன் பழங்கள் கொடுத்தும்
மகிழ்ச்சிக்குள்ளாக்கினர். யாரா இருந்தா என்ன….தப்பு செஞ்சா தண்டனை உண்டு.
திருந்துவதற்குத்தானே தண்டனை….

Latest news