Monday, July 21, 2025

முதல் ஒலிம்பிக் போட்டி
வீடியோ வைரலாகும் வீடியோ

2021 ஆம் ஆண்டு, ஜுலை 23 ஆம் தேதி ஜப்பான் தலைநகர்
டோக்யோவில் 32 ஆவது ஒலிம்பிக் போட்டிதொடங்கியது.
ஆகஸ்ட் 8 ஆம் தேதிவரை நடைபெற்ற இந்த ஒலிம்பியாட்டில்
33 வித விளையாட்டுகள், 50 பிரிவுகளில் 339 போட்டிகள் 42 இடங்களில்
நடைபெற்றன.

இதில் 205 நாடுகள் கலந்துகொண்டன.

இப்போதுள்ளவர்கள் எவரும் முதன்முதலில் நடந்த
நவீன ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை.

கிட்டத்தட்ட 113 ஆண்டுகளுக்குமுன் அதாவது, 1908 ஆம் ஆண்டில்
ஒலிம்பிக் பந்தயம் தொடங்கியது. லண்டனில் நடைபெற்ற இந்தப்
போட்டியில் 22 நாடுகள் கலந்துகொண்டன. சுமார் 6 மாதங்கள்வரை
இப்போட்டி நடந்தது.

அப்போது போட்டியை நடத்திய இங்கிலாந்தே அதிகப் பதக்கங்கள்
பெற்று முதலிடம் வகித்தது. அந்த ஒலிம்பிக் போட்டியின் வீடியோ
தற்போது வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள கம்பு ஊன்றி உயரம்
தாண்டுதல், வீராங்கனைகள் கலந்துகொண்ட வில்வித்தை,
உயரம் தாண்டுதல், மனிதர்களைத் தாவிக் குதித்தல்,
பேட்மிண்டன் போன்ற போட்டிகளைக் காணலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news