மாறுபட்ட உயிரினங்கள் நட்புகொண்டு உலா வருகின்றன.
ஒரே இனமான மனிதர்களோ இதைப் புரிந்துகொள்ளாமல்
சண்டையிட்டு நிம்மதியை இழக்கின்றனர்.
பூனை ஒன்று நாயை வாக்கிங் அழைத்துச் செல்லும் வீடியோ
பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது-
பொதுவாக, மனிதர்கள்தான் தாங்கள் நடைப்பயிற்சி செல்லும்போது
தங்களின் செல்லப்பிராணியை அழைத்துச் செல்வர். பாதுகாப்புக்காகவும்,
தனிமையைப் போக்கவும் இவ்விதம் செல்வதுண்டு.
ஆனால், எதிரெதிர் துருவங்களான நாயும் பூனையும் நட்பு
பாராட்டி நடைப்பயிற்சி மேற்கொள்கின்றன.
நாயைக் கண்டாலே உயிர் பயத்தில் ஓடி ஒளிந்துகொள்ளும்
பூனை அணுவளவும் அச்சமின்றி, நாயை வாக்கிங் அழைத்துச்
செல்கிறது. நாயின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள கயிற்றைப் பூனை
நன்கு பிடித்துக்கொள்ள நாய் ரசனையோடு வலம் வருகிறது.