பட்டம் பறக்க விடுவதுபோல குழந்தையைப் பறக்க விட்டுள்ளனர் பெற்றோர்.
வேடிக்கையான இந்த வீடியோவை 5 மில்லியன்பேர் பார்த்துள்ளனர்.
குழந்தை பறக்குமா என்ற கேள்விக்கு இந்த வீடியோ பதில் அளிக்கிறது.
ஒரு டஜன் பலூன்களை அந்தக் குழந்தையோடு இணைத்துப் பறக்கச் செய்துள்ளனர்.
குழந்தையைக் காணவில்லையே என்னும் பரிதவிப்போடு ஓடிவரும் தாய்,
குழந்தை மேல்நோக்கிப் பறப்பதைக் கண்டு பதறிப்போய்
ஐயோ கடவுளே என்று பிடிக்க ஓடிவருகிறார்.
அப்போது அங்கே குழந்தையின் தந்தை பறந்த குழந்தையைப் பிடித்தபடி வர,
அப்பாடா என்று தாய் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்.
வேடிக்கைக்காக செய்யப்பட்ட இந்தச் செயல் கடும் விமர்சனங்களுக்கு
உள்ளாகியுள்ளது. குழந்தையை வைத்தா வேடிக்கை காட்டுவது என்று
கண்டனம் தெரிவித்துள்ளனர்.
எப்படியோ, புவி ஈர்ப்பு விசையை மீறி காற்றடைத்த பலூன்கள்மூலம்
குழந்தை மேல்நோக்கிப் பறப்பது விந்தையான செயலாக அமைந்துள்ளது.