Sunday, December 22, 2024

விளையாட்டு வீரரை ஏமாற்ற முயன்ற நாய்

விளையாட்டு வீரரை ஏமாற்ற முயன்ற நாய்
வலைத்தளவாசிகளைக் கவர்ந்து வருகிறது.

தன்னோடு விளையாடுவதற்கு சிலர் தங்களின்
செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்வார்கள்.
அந்த வகையில் ஒருவர், பசுமையான மைதானத்துக்கு
தன்னுடைய செல்லப்பிராணியை அழைத்துச் சென்றார்.

அந்த மைதானத்தில் மட்டையால் பந்தை அடித்துவிரட்டுகிறார்,
தொலைவில் விழுந்த அந்தப் பந்தை எடுத்துக்கொண்டு
வரவேண்டிய செல்லப்பிராணி, பந்து பறந்துசென்று
விழுந்த இடத்துக்கு ஓடிச்செல்லவில்லை.

மாறாக, எஜமானரின் அருகே தரையில் கிடக்கும்
மற்றொரு பந்தை எடுத்துத் தர ஓடிவருகிறது.
சட்டென எஜமானர் பந்தை எடுத்துக்கொள்கிறார்.

செல்லப்பிராணியின் சமயோசிதப் புத்தியையும்
எஜமானர் செய்த செயலையும் அனைவரும் ரசித்து மகிழ்ந்தனர்.

Latest news