Wednesday, January 15, 2025

தலையில் 735 முட்டைகளை அடுக்கிய சாதனை இளைஞர்

https://www.instagram.com/reel/CU5yfsOIQ1i/?utm_source=ig_web_copy_link

இளைஞர் ஒருவர் தனது தொப்பியில் 735 முட்டைகளை அடுக்கி கின்னஸ் சாதனை புரிந்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோ அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.

கின்னஸ் சாதனை புரிந்துவிட்டால் உலகளவில் ஒரே நாளில் பிரபலமாகிவிடலாம் என்பதற்காகப் பல்வேறு புதிய புதிய யோசனைகளுடன் கின்னஸ் அலுவலகத்தில் பலர் தங்கள் பெயரைப் பதிவுசெய்து வருகின்றனர்.

அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள பெனின் நாட்டைச் சேர்ந்த இளைஞர் கிரிகோரி டா சில்வா, 735 முட்டைகளைத் தனது தலையில் உள்ள ஜார்பிடென்ட் தொப்பியில் கீழே விழாதவாறு, ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

சீனாவில் நடைபெற்ற ஒரு சிசிடிவிக்கான நிகழ்ச்சியில் மூன்று நாட்கள் செலவழித்து ஒவ்வொரு முட்டையாக அடுக்கி வைத்துள்ளார் கிரிகோரி. இந்த கின்னஸ் சாதனை செய்ததன்மூலம் உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ள அந்த இளைஞர் பல நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளதுடன், பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு விஜபியாகியுள்ளார்.

இந்தப் புதுமையான செயல் குடும்பத் தலைவிகள், ஓட்டல் உரிமையாளர்கள், முட்டை வாகனங்கள் ஓட்டுபவர் உள்பட அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.

நமக்கெல்லாம் கடையில் வாங்கிய சில முட்டைகளை அதற்கான கூட்டில் வைத்து உடையாமல் வீட்டுக்குக் கொண்டுவருவதே கின்னஸ் சாதனைதான்..

எதற்கும் இந்த வீடியோவை நன்றாகப் பார்த்து நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் இளைஞர்களே… உங்க அம்மாவிடமோ மனைவியிடமோ திட்டு வாங்காமலிருக்க உதை வாங்காமலிக்க இந்த வீடியோ உதவலாம்..

Latest news