Wednesday, February 5, 2025

65 ஆண்டுகளாகக் குளிக்காத அழுக்கு மனிதர்

ஒருவர் 65 ஆண்டுகளாகக் குளிக்காமலிருக்கும் தகவல் சமூக இணையத்தில் உலா வருகிறது.

ஈரானில் வசிப்பவர் அமோ ஹாஜி. இவருக்கு சொந்தமாக வீடு இல்லையாம். அதனால், தனது சொந்தக் கிராமத்திலிருந்து வெகுதொலைவிலுள்ள வெட்டவெளியிலுள்ள பாலைவனம்தான் அவரது வசிப்பிடமாம்…

தற்போது 83 வயதாகும் இவர் கடந்த 65 வருடங்களாகக் குளிக்காமல் இருக்கிறாராம். குளித்தால் நோய் வந்துவிடுமெனப் பயப்படுகிறாராம்…அதனால் தண்ணீரைக் கண்டாலே பயந்துவிடுகிறாராம்…

ஆனாலும், அமோ ஹாஜி மிகவும் சுறுசுறுப்பாக உள்ளாராம்… அதேசமயம், இன்னொரு விநோக பழக்கமும் அமோவிடம் உள்ளது. இறந்த விலங்குகளின் அழுகிய இறைச்சியே அவரது விருப்பமான உணவாம்.

சைவ உணவும் அவரது மெனுவில் உள்ளது. அதுவும் அழுகிய ஈரான் நாட்டுக் காய்கறிகள், பழங்கள்தான்.

இன்னுமொரு உவ்வே பழக்கமும் அவரிடம் தொற்றிக்கொண்டுள்ளது. கிராமவாசிகள் கொடுக்கும் சிகரெட்டுகளை ஊதித்தள்ளும் அமோ ஹாஜி, சிகரெட் தீர்ந்துவிட்டால்…..
விலங்குகளின் உலர்ந்த மலத்தைத் தனது சிகரெட் பைப்பில் போட்டுப் புகைப்பாராம்.

இவ்வுலகிலுள்ள சுகபோகங்களைத் துறந்து இப்படி வாழ்வதுதான் அமோ ஹாஜிக்குப் பிடித்துள்ளதாம்…

Latest news