Sunday, July 13, 2025

மசாலாவுக்குப் பதில் மணல் கலந்து சாப்பிடும் மக்கள்

மசாலாவுக்குப் பதில் மணல் கலந்து சாப்பிடும் மக்களின் விநோத வழக்கம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஈரானின் கடற்கரையிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் பாரசீக வளைகுடாப் பகுதியில் அமைந்துள்ளது ஹோர்மஸ் தீவு. 42 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்தத் தீவில் 70க்கும் மேற்பட்ட கனிமங்கள் காணப்படுகின்றன.

வானவில் தீவு என்று அழைக்கப்படும் இந்தப் பகுதியில் வண்ணமயமான மலைகள் உள்ளன. இந்த மலைகளிலிருந்து வெளிப்படும் வெவ்வேறு நிறத்தினாலான மணல் சாப்பிடுவதற்கு ஏற்றதாகவும் சுவை யூட்டுவதாகவும் இருக்கிறது.

அசல் மசாலாப் பொருட்களுக்குப் பதில் மணலையும் சேறையும் கலந்து சாப்பிடும் புதுமையான வழக்கத்தை அங்குள்ள மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் ஆச்சரியம் என்னவென்றால், மணலையும் சேறையும் கலந்தபிறகு உணவின் சுவை அதிகமாவதாகவும் ஆரோக்கியம் மேம்படுவதாகவும் அங்குள்ள மக்கள் மகிழ்ச்சியோடு கூறுகின்றனர்.

மேலும், இங்கு வசிப்பவர்கள் உணவை வீணாக்குவதில்லையாம்.
இந்த உணவை சாப்பிடுவதற்காகவே ஏராளமான மக்கள் ஹோர்மஸ் தீவுக்கு சுற்றுலா வருகிறார்களாம்.

மில்லியன் கணக்கான ஆண்டுகளாக இந்த மலைப்பகுதியில் கனிமங்கள் குவிந்து மண்ணாக மாறியுள்ளன. அதனால்தான் அவை உண்பதற்கு ஏற்றதாக உள்ளது என்கிறார்கள் நிலத்தியல் ஆய்வாளர்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news