Wednesday, January 15, 2025

இதயத்தை வருடும் சிறுவனின் ஆறுதல் வீடியோ

https://www.instagram.com/reel/CWSN1IeKo3J/?utm_source=ig_web_copy_link

விடுதியில் தங்கிப் படிக்கும் சிறுவனுக்கு சக மாணவன் சொல்லும் ஆறுதல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகத் தொடங்கியுள்ளது.

அருணாசலப்பிரதேச மாநிலம், தவாங் நகரில் விடுதியில் தங்கிப் படிக்கும் பள்ளி ஒன்று உள்ளது. அந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் வகுப்பறையிலுள்ள ஒரு வீடியோ இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், தாய் தந்தையைப் பிரிந்து விடுதியில் தங்கிப் படிப்பதால் குழந்தைகள் சோகத்துடன் உள்ளனர். அப்போது என்னசெய்வதென்று தெரியாமல் தவிப்போடு உள்ள ஒரு மாணவனுக்கு சக மாணவன் ஒருவன் நன்கு பக்குவப்பட்டவனாகத் தாய்ப் பாசத்தோடு ஆறுதல் சொல்லும் காட்சிகள் இதயத்தை வருடுகிறது.

சோகத்தோடு உள்ள மாணவனின் தலையைத் தடவிப் பாசமழை பொழிவதும், கைகளைப் பற்றி ஆறுதல் சொல்லித் தேற்றுவதும், கவலைப்படாதே நானிருக்கிறேன், நாங்கள் இருக்கிறோம் என்பதுபோல அரவணைக்கும் அன்புச் சொற்களை அள்ளிவீசுவதும் நெகிழ்ச்சியடையச் செய்கிறது.

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவைப் பார்த்து நீங்களும் ஆனந்தம் கொள்ளுங்கள்.

Latest news