Wednesday, January 15, 2025

அமெரிக்காவில் வைரலாகும் ரசம்

நம்ம ஊர் ரசம் அமெரிக்காவில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்திலுள்ள பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் தலைமை சமையல் கலைஞராகப் பணிபுரிந்து வருபவர் அருண் ராஜதுரை. அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர், கோவிட் 19 வைரஸைக் கட்டுப்படுத்துவற்காக உணவையே மருந்தாக்க விரும்பினார்.

இதற்காக மூன்று மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு உணவுடன் சேர்த்து ரசத்தையும் கொடுத்தார். இது வெற்றிபெற்றது. இந்த வெற்றி ரசத்தின் மகத்துவத்தை வெளியுலகுக்குத் தெரியப்படுத்திவிட்டது.

அதைத் தொடர்ந்து தினமும் 500 முதல் 600 கப் ரசத்துக்கு ஆர்டர் வந்துவிட்டது.
அமெரிக்காவின் புதிய நோய் எதிர்ப்பு சக்தி மருந்தாக உருவெடுத்துள்ள ரசத்தின் பெருமையை நினைத்து இந்தியர்கள் புன்னகை பூக்கின்றனர்..

அமோக வரவேற்பு கிடைத்துள்ள ரசம் தென்னிந்தியர்களின் அன்றாட உணவு என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

ரசம் என்பதற்கு சாறு அல்லது சாரம் என்று பொருள். தமிழ்நாடு, கேரளாவில் ரசம் என்னும் பெயரிலும், கர்நாடகா, ஆந்திராவில் சாறு என்னும் பெயரிலும் அழைக்கப்படும் இந்த அன்றாட உணவு இப்போது அமெரிக்காவிலும் மணம் பரப்பத் தொடங்கிவிட்டது.

இஞ்சி, மஞ்சள், பூண்டு ஆகியவை கலந்து சமைக்கப்பட்ட ரசத்தை கோவிட் 19 நோயாளிகளுக்கு அருண் ராஜதுரை வழங்கினார். இந்த ரசம் தொண்டை அரிப்புக்கு உடனடி நிவாரணம் அளித்ததுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் உருவாக்கியது.

மொத்தத்தில் 200 வகையான ரசம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Latest news