செவ்வாய்கிழமை டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் ஒன்று இழுவை டிராக்டர்வுடன் மோதியதில் விமானத்தின் முன்பகுதியில் சேதமடைந்ததாக விமான ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் ,ஆனால் 182 பயணிகளுடன் கவுகாத்திக்கு செல்லவிருந்த விமானம் ஆய்வு மற்றும் சரிசெய்வதற்காக நிறுத்தப்பட்டது.
ஏர் இந்தியா விமான விபத்து குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்த விபத்து குறித்து டிஜிசிஏ அதிகாரிகள் கூறுகையில், விமானம் இழுவை டிராக்டரால் ஓடுபாதையை நோக்கித் தள்ளப்பட்டதால், விமானத்தை இணைக்கும் ஹோல்டிங் பின் உடைந்து, டிராக்டர் விமானத்தின் மூக்கு பகுதியில் மோதியது. இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனம் எந்த பதிலும் அளிக்கவில்லை.
இதுபோன்ற சம்பவம் இது முதல் முறையல்ல. மார்ச் 28 அன்று, ஸ்பைஸ்ஜெட் விமானம் ஜம்முவுக்கு புறப்படுவதற்கு முன் டெல்லி விமான நிலையத்தில் விமானம் நிறுத்தப்பட்ட நிலையில் இருந்து பின் தள்ளப்பட்டபோது மின்னல் கம்பத்தில் மோதியது என தெரிந்தனர்.