Friday, January 3, 2025

30 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே தெரிந்த வெள்ளத்தில் மூழ்கிய கிராமம்

30 ஆண்டுகளுக்குமுன்பு வெள்ளத்தில் மூழ்கிப்போன கிராமம் ஒன்று தற்போது வெளியே தெரிந்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் அசெரிடோ என்ற கிராமம் இருந்தது. அந்தக் கிராமம் அமைந்திருந்த பகுதியில் லிமியா என்னும் நதி பாய்ந்தோடி வருகிறது. 1992 ஆம் ஆண்டில் திடீரென்று லிமியா நதியில் திடீரென்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அசெரிடோ கிராமம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. வெள்ளத்தைத் தடுக்க முடியாததால் கிராமத்தினர் அனைவருமே அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.

இந்த நிலையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, அசெரிடோ கிராமம் வெளியே தெரியத் தொடங்கியது. அதனையறிந்த அந்தக் கிராமவாசிகள் உடனே சென்று பார்த்தனர்.
அப்போது கல்லால் கட்டப்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடையாமல் இருந்தன. சாலைகளும் அப்படியே இருந்தன. என்றாலும் அவை சேறும் சகதியுமாகக் காட்சியளிக்கின்றன.

தற்போது இந்தக் கிராமத்தினர் மட்டுமன்றி, பலரும் வெள்ளத்தில் மூழ்கியிருந்த அசெரிடோ கிராமத்தைப் பார்வையிட்டுச் செல்கின்றனர். இதனால் சுற்றுலாத் தலமாக இப்போது உருவாகியுள்ளது அசெரிடோ.

Latest news