உக்ரைன் அகதிகளை வரவேற்க ஓர் தனி  தீவையே வீடாகும் வயதான தம்பதி

273
Advertisement

பிப்ரவரி 24 அன்று ரஷ்யாவால் உக்ரைன் மீதான படையெடுப்பு , இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய அகதிகள் நெருக்கடி சூழலை ஏற்படுத்தி உள்ளது.பல தசாப்தங்களாக தங்கள் குடும்பத்தில் இருந்த மதிப்புமிக்க பொருட்களையும் சொத்துக்களையும் விட்டுவிட்டு ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

இடம்பெயர்ந்த உக்ரேனியர்களை வரவேற்க அண்டை நாடுகளிலும் உலகின் பிற பகுதிகளிலும் உள்ள பலர் தங்கள் கதவுகளைத் திறந்துள்ளனர்.

இந்நிலையில் , கனடாவில் உள்ள வாங்குவர் (Vancouver) தீவைச் சேர்ந்த பிரையன் மற்றும் ஷரோன் தம்பதியினர், நூற்றுக்கணக்கான மக்கள் தங்குவதற்குப் போதுமான பெரிய ரிசார்ட்டை வைத்துள்ளனர். இது கிழக்கு சூகே தீவில் அமைந்துள்ளது. கனடாவிற்குள் நுழையும் உக்ரேனிய அகதிகளை வரவேற்கும் விதமாக 15,000 சதுர அடி கொண்ட ரிசார்ட்டையும் தீவையும் சீரமைத்து வருகின்றனர்.

இந்த வயதான தம்பதி , பல ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைனில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்ததால், அகதிகளுக்கு உதவு முடிவு செய்தனர்.

ukrainiansafehaven.org  என்ற இணையத்தின் மூலம் இந்த இடத்தின் முழு விவரங்களை தெரிந்துகொள்ள முடியும். இதன் மூலம் இந்த இடத்தை தங்க உகந்த இடமாக மாற்றுவதற்க்கு தன்னால்வர்கள் உதவியும் பெறப்பட்டது.

உங்கள் ஆதரவுடன், நாங்கள் 100க்கும் மேற்பட்ட உக்ரைனிய அகதிகளுக்கு பாதுகாப்பான மற்றும் அமைதியான வீட்டு சூழலை ஏற்படுத்த முயற்சிக்கிறோம். இதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகிறது. பல தன்னால்வர்கள் உதவி வருவதாக இந்த இணையத்தில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.