ஒருவர் எந்தத் தொழிலில் பணிபுரிந்தாலும், எந்த சூழ்நிலையில் இருந்தாலும் குடும்பத்தின் மீதான அக்கறைக்கு தான் எப்போதும் அதிக முன்னுரிமை கொடுப்பார் . சவாலான காலங்களில் குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றதிலிருந்து ஒருவரை எந்த ஷக்தியும் தடுக்க முடியாது.
இது போன்ற ஒரு சூழலில் , நபர் ஒருவர் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.அமெரிக்காவில் என்.பி.சி என்ற செய்தி தொலைக்காட்சியில் பணியாற்றுபவர் Doug Kammerer. நேரலையில் அமெரிக்காவை தாக்கும் புயல் ஒன்றை பற்றி விவரித்துக்கொண்டுருந்தார்.
மேரிலாந்தை நோக்கி வீசிய ஒரு புயலை குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை வைத்து நேரலையில் அவர் புயலின் வேகம், திசை போன்ற புயலின் நகர்வுகளை கணித்துக்கொண்டு இருந்தார்.
சில நிமிடங்களில், புயலின் பாதை நேராக செவி சேஸில் உள்ள தனது வீடு அமைந்திருக்கும் பகுதியில் உள்ளதை உணர்ந்த அவர் , பேசுவதை நிறுத்திவிட்டு தனது தொலைபேசியை எடுத்து , தொலைக்காட்சியில் நேரலையில் இருக்கும்போது தனது வீட்டில் தனியாக உள்ள குழந்தைகளுக்கு போன் செய்து,
அவர்களை வீட்டில் அடித்தளத்திற்கு சென்று பாதுகாப்பாக இருக்கும் படி சொல்கிறார். இவை அனைத்தும் நேரலை சென்றுகொண்டு இருக்கும் போது பேசிகொண்டுருக்கிறார். இதனை அந்த செய்தி நிறுவனமும் நேரலையை நிறுத்தாமல் ஒளிபரப்பு செய்ததது.
குடும்பத்தின் மீது அவருக்கு உள்ள அக்கறை அளவற்றது என்பதை உணர்த்தும் விதம் உள்ள அவரின் இந்த செயல் , இணையத்தில் வைரலானது. அதுவும் இந்த வீடியோவை ,அவர் பணிபுரியும் செய்தி நிறுவனமே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இது குறித்து அவர் கூறுகையில் , நான் நேரலையில் அந்த அழைப்பைச் செய்ய வேண்டியிருந்தது.அந்த புயல் என் வீட்டிற்கு மிக அருகில் செல்வதைக் கண்டேன், என் குழந்தைகளை எச்சரிக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்றார். அதிர்ஷ்டவசமாக, புயலின் போது அவரது குழந்தைகள் பாதுகாப்பாக இருந்தனர்.
குடும்பத்தின் மீத ஒவ்வொரு தந்தையும் வைத்திருக்கும் பாசம் , அக்கரைக்கு உதாரணமாக இவரின் செயல் இருந்தது . இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து , அவருக்கு பாராட்டுக்கும் குவிந்துவருகின்றன.