Monday, July 28, 2025

பூமிக்கு திரும்பினார் 355 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து சாதனை படைத்த விண்வெளி வீரர் ..!!

சர்வதேச விண்வெளியில் பணி மேற்கொள்வதற்காக 355 நாட்கள் தங்கியிருந்து சாதனை படைத்த நாசா விண்வெளி வீரர் மார்க் வந்தே ஹெய் பூமிக்கு திரும்பினார்.

மேலும் அவருடன் இரண்டு ரஷிய விண்வெளி வீரர்களும் (அன்டன் ஷ்காப்லெரோவ் மற்றும் பியோட்ர் டுப்ரோவ்) பூமிக்கு திரும்பினர் வீரர்கள் பூமிக்கு திரும்புவதை நாசா நேரடி ஒளிபரப்பு செய்தது.

பூமிக்கு திரும்பிய இவர்கள் மூவரும் மீண்டும் தங்களது வழக்கமான பணியை மேற்கொள்ள உள்ளனர்.

நாசா விண்வெளி வீரர் மார்க் வந்தே ஹெய். இவர் கடந்த 2021, ஏப்ரல் 9-ம் தேதி அன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணி மேற்கொள்வதற்காக பூமியில் இருந்து புறப்பட்டார்.

இவர் சமீபத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நாட்கள் (355 நாட்கள்) தங்கியிருந்து பணி செய்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்பு ஸ்காட் கெல்லி விண்வெளியில் தொடர்ந்து 340 நாட்கள் தங்கியிருந்ததே சாதனையாக இருந்தது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News