Wednesday, January 15, 2025

கத்திக்குத்திலிருந்து காப்பாற்றும் டி.சர்ட்

புல்லட் புரூஃப் ஆடைபோல், கத்திக்குத்து தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் டி. சர்ட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆயுதத் தயாரிப்பு நிறுவனம் ஒன்று இந்த டி.சர்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு டி.சர்ட்டின் விலை 16 ஆயிரம் ரூபாய்.

இந்த டி.சர்ட் தடிமனாக இல்லாமல், சாதாரண டி.சர்ட்போலவே உள்ளது.

மிகவும் உறுதியான, உயர்தரமான பாலி எத்திலீன் இழைகளால் தயாரிக்கப்பட்டுள்ளதாம். கத்தியால் குத்துதல், வெட்டுதல் போன்ற தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறதாம் இந்த டி.சர்ட்.

Slash PRO என்னும் இந்த நிறுவனம் மருத்துவமனைப் பணியாளர்கள், அவசர சேவைப் பணியாளர்கள், சிறைச்சேவைப் பணியாளர்கள், பள்ளிகள், தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கான சிறப்பு உடைகளைத் தயாரிப்பதில் பிரபலமானது.

இந்த டி.சர்ட் பற்றி விளம்பரம் செய்துள்ள Slash PRO நிறுவனம், குணப்படுத்துவதைவிட தடுப்பு சிறந்தது, வருந்துவதைவிட பாதுகாப்பானது என்று கூறியுள்ளது.

எங்கே சார் கிளம்பிட்டீங்க….டி. சர்ட் வாங்கவா? எத்தனை?

Latest news