Wednesday, January 14, 2026

யானையையே பயந்து ஓட செய்த பெண்  வைரல்  வீடியோ !

பொதுவாக நம் இந்தியாவில் சாலைகளில் வாகனங்களை ஓட்டி செல்வது மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது.    நாளுக்கு நாள் சாலை விபத்துக்களில் சிக்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்றது, பலரும் கவனக்குறைவாக, செல்போன்களில் பேசிக்கொண்டோ அல்லது வேடிக்கை பார்த்துக்கொண்டோ சென்று விபத்துக்களில் சிக்கி சேதமடைகின்றனர். இந்த விபத்துக்களில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அடிபடுகிறது என்றால் சாலையில் சாதாரணமாக சென்று கொண்டிருப்பவர்களுக்கும் இவர்களால் விபத்து ஏற்பட்டு விடுகிறது.பல நேரங்களில் மனிதர்களை விட கால்நடைகள் விபத்திற்கு உள்ளாகின்றன, இதுபோன்ற விபத்து வீடியோக்கள் அதிகளவில் இணையத்தில் பகிரப்பட்டு பலரையும் பீதியடைய செய்கிறது, இருப்பினும் கவனக்குறைவால் சாலைகளில் ஏற்படும் விபத்துக்கள் குறைந்தபாடில்லை.  இதுபோன்று கவனக்குறைவாக ஒரு பெண் ஸ்கூட்டர் ஓட்டிகொண்டு வந்து, யானையின் மீதும்  அவர் அருகில் நின்று கொண்டிருந்தவர் மீது  மோதுவது போன்ற ஒரு வீடியோ தற்போது  வைரலாகி வருகிறது.

பெரிய யானை ஒன்று டிரக்கில் இருந்து இறங்கி வந்து சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டு இருக்கிறது. அந்த சாலையானது நன்கு அகலமான சாலை, வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு  நின்றுகொண்டிருந்த அந்த யானையின் மீது ஒரு பாகனும், யானையின் அருகில் மற்றொரு பாகனும் நின்று கொண்டிருந்தனர்.  அப்போது அந்த வழியாக ஸ்கூட்டியில் வந்த பெண் ஒருவர் வேகமாக யானையின் அருகில் நின்ற அந்த பாகனை ஒரே நொடியில் வேகமாக வண்டியில் இடித்து முட்டி தூக்கி எறிந்தவர், நேராக யானையின் மீது வண்டியை மோதினார்.  இந்த சம்பவத்தால் பயந்துபோன அந்த யானை பயந்துகொண்டு அந்த இடத்தை விட்டு வேகமாக ஓட ஆரம்பித்தது. 

 

யானை ஓடுவதை கண்டு பயந்த மக்களும் அங்கிருந்து ஓட ஆரம்பித்தனர், அதிர்ஷடவசமாக யானையால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை .இந்த சம்பவத்தால் அந்த இடமே  சிறிது நேரத்திற்கு கலவரமாக மாறியது.  இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Related News

Latest News