99 மில்லியன் ஆண்டுகள் பழமையான 2 பூக்களை விஞ்ஞானிகள் கண்டறிந்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.
டயனோசர் காலத்திலிருந்த அம்பர் என்ற பெயர் கொண்ட ரகத்தைச்சேர்ந்த அந்தப் பூக்கள், தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை பழமை மாறாமல் இன்றும் அப்படியே உள்ளன.
அம்பர் என்பது புதைபடிவ மரப் பிசின் ஆகும். இது கற்காலத்திலிருந்தே அதன் நிறம் மற்றும் அழகுக்காகப் பாராட்டப்பட்டது. பழங்காலத்திலிருந்து இன்றுவரை ரத்தினமாக மதிக்கப்படும் அம்பர் பல்வேறு அலங்காரப் பொருட்களாக செய்யப்படுகிறது.
நகைகளில் பயன்படுத்தப்படுகிறது. நாட்டுப்புற மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
பைலிகா, பைலோபர் மென்சிஸ் என்ற பெயர் கொண்ட அப்பூக்கள் வாடிப்போகாமல் இன்று பூத்ததுபோல் அப்படியே இருப்பதுதான் விஞ்ஞானிகளின் இந்த வியப்புக்கு காரணம். இந்தப் பூக்கள் பூத்தவுடன் விரைவாகப் பழங்களாக மாறி, விதைகளைப் பரவச் செய்து சிதைந்துவிடும் இயல்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது.
அடிக்கடி காட்டுத்தீயால் பாதிக்கப்படும் பூக்களின் மத்தியில், 99 மில்லியன் ஆண்டுகளாகப் பூத்தபோது உள்ளவாறே இருப்பது விஞ்ஞானிகளைதான் ஆச்சரியத்தில் மூழ்கவைத்துள்ளது.
இந்தப் பூக்கள் எப்படிப் பூத்தன? இன்றுவரை அழுகாமல் இருப்பதற்குக் காரணமென்ன என்று ஆராயத் தொடங்கியுள்ளனர் விஞ்ஞானிகள்.