Wednesday, December 17, 2025

அனுமதி இன்றி வாடகைக்கு விடப்பட்ட 92 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த பொத்தேரி பகுதியில் தனியார் பல்கலைக்கழகம் மற்றும் கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள மென்பொருள் நிறுவனங்கள் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தங்கி படித்தும்,வேலை பார்த்தும் வருகின்றனர்.

இவர்களை குறி வைத்து போக்குவரத்து துறையின் உரிய அனுமதியின்றி இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் வாடகைக்கு விடப்பட்டு வந்தன. இதன் காரணமாக பொத்தேரி பகுதியில் அடிக்கடி ஆட்டோ டிரைவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு விடுவோருக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று இரவு போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆணையர் தலைமையில் 50 நேற்று இரவு பொத்தேரி பகுதியில் சோதனை நடத்தினர். இதில் 16 கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 92 இருசக்கர வாகனங்கள்,16 கார்கள் என மொத்தம் 108 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து பொத்தேரியில் செயல்பட்டு வரும் தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News