Monday, July 28, 2025

ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கங்கள் : பீதியில் மக்கள்

ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதால், எப்போது வேண்டுமானாலும் வெளியேற தயாராக இருக்குமாறு பொதுமக்களுக்கு அரசாங்கம் அறிவுறத்தியுள்ளது.

ஜப்பான் நாட்டின் டோகாரா தீவில் கடந்த 2 வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகி உள்ளன. இதில் மிகப்பெரிய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளியாக பதிவானது.

இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டோகாரா கடற்கரை பகுதியில் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. எப்போது வேண்டுமானாலும் வெளியேற தயாராக இருக்குமாறு பொதுமக்களை அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News