ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளத்தில் உள்ள ஒரு கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏகாதசி பண்டிகையையொட்டி காசிபுக்காவில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் பக்தர்கள் பெருமளவில் கூடியிருந்தபோது இந்த நெரிசல் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது :
“ஸ்ரீகாகுளம் மாவட்டம் காஷிபுக்காவில் உள்ள வெங்கடேஸ்வரா கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவத்தில் பக்தர்களின் மரணம் மிகவும் வேதனையளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு விரைவான மற்றும் முறையான சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். சம்பவ இடத்திற்கு உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் வருகை தந்து நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்”.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
