பி.எஸ்.என்.எல். நிறுவனம் தன்னுடைய மொபைல் போன் பயன்பாட்டாளர்களின் நெட்வொர்க் சிக்கல்களை தீர்க்க பெரிய நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு சார்ந்த இந்த தொலைதொடர்பு நிறுவனம் நாடு முழுவதும் 84 ஆயிரம் புதிய 4ஜி மொபைல் டவர்களை நிறுவியுள்ளது.
இந்த 4ஜி டவர்களை முழுமையாக நிறுவும் பணிகள் முடிவடைந்ததும், விரைவில், 5ஜி சேவைகளை தொடங்க பி.எஸ்.என்.எல். நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இதனால், கிராமப்புற, நகர்ப்புற என மொத்தம் 9 கோடிக்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல். பயனாளர்கள் பயன் பெறுவார்கள்.
தற்போது வரை, திட்டத்தின் 83.99 சதவீதம் பணி நிறைவடைந்து விட்ட நிலையில், நிறுவப்பட்ட டவர்களின் எண்ணிக்கை 84 ஆயிரத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே 5ஜி சேவையை வழங்கும் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் பி.எஸ்.என்.எல். நிறுவனமும் செயல்பட்டு வருகிறது.