80 மில்லியன் பயனாளர்களை இழக்கும் “இன்ஸ்டாகிராம்”

228
Advertisement

உக்ரைன் மீதான ரஷ்யா எடுத்துள்ள இராணுவ நடவடிக்கையால் பல உலக நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் குறிப்பாக கூகுள் , முகநூல் இன்ஸ்டாகிராம் , ஷேர் சாட் , உள்ளிட்ட உலகில் அதிகம் மக்கள் பயன்படுத்தும் சமூக செயலிகளும் தடையும் அடங்கும்.

இந்நிலையில் ரஷ்யாவில் திங்கள்கிழமை முதல் இன்ஸ்டாகிராம் செயலிக்கு தடை விதிக்கப்படுறது. இதனால் இன்ஸ்டாகிராம் 80 மில்லியன் பயனாளர்களை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இது ஒருபுறம் இருக்க , அந்நாட்டில் சமூக வலைதளத்தின் மூலம் பிரபலமானவர்கள் கண்ணீர்விட்டு கதறி வருகின்றனர்.

தங்களின் தனி திறமை மூலம் பல லட்சக்கணக்கான இதயங்களை வென்ற பிரபலங்கள் கண்ணீர் மல்க இன்ஸ்டாகிராமிற்கு விடைபெற்று வருகின்றனர். அதுபோது அவர்கள் அழும் வீடியோக்கள் இணையத்தில் புயலை கிளப்பியுள்ளன.

இந்த வரிசையில் , ரஷ்ய ரியாலிட்டி டிவி நச்சத்திரமான புசோவா ஞாயிற்றுக்கிழமை தனது கடைசி வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் , இந்த செயலியை தடை செய்வது ‘தன் உயிரை தன்னிடமிருந்து பறிப்பது போல் உணர்கிறேன் . எதிர்காலம் என்னவென்று எனக்கு தெரியாது . நான் என் வாழ்க்கையையும், என் வேலையையும், என் ஆன்மாவையும் பகிர்ந்து கொண்டேன். என் உயிர் பறிக்கப்படுவது போலவும் உணர்கிறேன் நான்” என்று கூறியுள்ளார்.

ட்விட்டரில் பரவி வரும் மற்றொரு வீடியோவில் ரஷ்ய பெண் ஒருவர் கண்ணீர் விட்டு , “என்னைப் பொறுத்தவரை, இன்ஸ்டாகிராம் என் முழு வாழ்க்கை மற்றும் என் ஆன்மாவும்” என பதிவிட்டுள்ளார் .

இது போன்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது , இதற்கு ‘ கடவுளே, உக்ரைனில், மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள், குழந்தைகள் சுரங்கப்பாதையில் உள்ளனர், தூங்குவதற்கு எங்கும் இல்லை, அவர்கள் அனைத்தையும் இழந்துவிட்டார்கள், நீங்கள் Instagram தடை காரணமாக அழுகிறீர்கள் ‘ போன்ற கருத்துக்களை பலரும் கமெண்ட் ஆகா பதிவிட்டு வருகின்றனர்.

பேஸ்புக்கை முடக்கிய ஒரு வாரத்திற்குப் பிறகு ரஷ்யாவின் இன்ஸ்டாகிராம் தடை வந்துள்ளது. இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் இரண்டின் தாய் நிறுவனமான மெட்டா – உக்ரைன் உள்ளிட்ட சில நாடுகளுக்குப் பொருந்தும் புதிய கொள்கையை அறிவித்த பின்னர் வெள்ளிக்கிழமை தடை அறிவிக்கப்பட்டது, இது நாட்டிற்குள் ரஷ்ய படையெடுப்பு பற்றிய இடுகைகளில் வன்முறைக்கான அழைப்புகளை அனுமதிக்கிறது.

“உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் விளைவாக, ‘ரஷ்ய படையெடுப்பாளர்களுக்கு மரணம்’ போன்ற வன்முறை பேச்சு போன்ற எங்கள் விதிகளை மீறும் அரசியல் வெளிப்பாட்டின் வடிவங்களுக்கு தற்காலிகமாக நாங்கள் அனுமதித்துள்ளோம். ரஷ்ய குடிமக்களுக்கு எதிரான வன்முறைக்கான நம்பகமான அழைப்புகளை நாங்கள் இன்னும் அனுமதிக்க மாட்டோம்” என்று மெட்டா செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.