இது 8-கோடியா?பண்டையகால நாணயம்!

169
Advertisement

2000 ஆண்டுகளுக்கு முன்பு  தயாரிக்கப்பட்ட உயர்ந்த அடையாளமாக கருதப்படும் வெள்ளி நாணயம் வரலாற்றில் சிறியதுதான்.

இது கடந்த 2002ஆம் ஆண்டு இஸ்ரேலில் இருந்து கொள்ளைடிக்கப்பட்டது. ஜெருசேலத்தின் தெற்கு பகுதியான எலா பள்ளத்தாக்கில் இருந்து கண்டெடுக்கப்பட்டு, வைக்கப்பட்டிருந்த நாணயத்தை பாலஸ்தீனியர்கள் எடுத்துச் சென்றிருக்கலாம் என்று இஸ்ரேலின் பழங்கால பொருட்களுக்கான அமைப்புக்கு தகவல் கிடைத்தது. அப்பொழுது முதல் இது தேடப்பட்டவண்ணமிருந்தது.

அந்த நாணயத்தை கண்டுபிடிக்கவே 15 வருடங்கள் ஆகிவிட்டது என்று இஸ்ரேலிய பழங்கால பொருள்களுக்கான அமைப்பான ஐஏஏ கூறுகிறது.

Advertisement

இஸ்ரேலில் உள்ள சட்டவிரோத பழங்கால பொருட்கள் சந்தைகளில் இருந்து, ஜோர்டான் மற்றும் இங்கிலாந்து வழியே இந்த நாணயம்   கடத்தப்பட்டிருக்கிறது. 2017ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகி, கொலராடோ மாநிலத்தின் டென்வர் நகர ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது , பின்பு ஐஏஏவை அமெரிக்காவின் ஹோம்லேண்ட் பாதுகாப்பு புலனாய்வு அமைப்பானது தொடர்பு கொண்டு இது குறித்து தகவல் கொடுத்தது.

ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகள் உதவியுடன் ஐந்து நாடுகளில் இருந்து கிடைத்த தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நாணயத்தை திரும்பப் பெற நீதிமன்ற உத்தரவு கிடைக்கப்பட்டது.

இந்த நாணயம் கடந்த திங்களன்று மான்ஹாட்டன் மாவட்ட அட்டர்னி அலுவலகத்தில் நடந்த நிகழ்வில்  இஸ்ரேல் அதிகாரிகளிடம் அமெரிக்க அதிகாரிகளால் ஒப்படைக்கப்பட்டது.