Wednesday, December 24, 2025

தமிழகத்தில் 77.52 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு

பீகார் மாநிலத்தை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. பீகாரில் 60 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக புகார்கள் எழுந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள் 11-ந் தேதி முடிவடைந்து 16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட இருக்கிறது.

தற்போது நடத்தப்பட்ட சிறப்பு திருத்த பணிகள் மூலம் 77 லட்சத்து 52 ஆயிரத்து 529 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இறந்தவர்கள் என்ற முறையில் 25 லட்சத்து 72 ஆயிரத்து 871 பெயர்களும், இடம் பெயர்ந்தவர்களாக 39 லட்சத்து 27 ஆயிரத்து 973 பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இரட்டைப் பதிவுகளும் நீக்கப்பட உள்ளன.

Related News

Latest News