ஒடிசா மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு லாரியில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆந்திர – தமிழக எல்லையில் உள்ள பரதராமி சோதனை சாவடியில் பரதராமி போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சரக்கு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்த பொழுது அதில் 75 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து 75 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் (35)மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் (44) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் ஒரிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து தமிழகத்தில் விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
