Tuesday, December 10, 2024

7,400 ரூபாய், இலவச சவாரி…
எதற்குத் தெரியுமா?

பிரிட்டனில் இளைஞர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால்
கபாப், டாக்ஸி சவாரி உள்ளிட்ட இலவசங்களை அறிவித்துள்ளது.

பிரிட்டனில் 18 வயதுமுதல் 29 வயதுடைய இளைஞர்கள் 67% பேர்
தங்கள் முதல் டோஸ் செலுத்திக்கொண்டுள்ளனர். மீதமுள்ள இளைஞர்களையும்
ஈர்க்கும்விதமாக இந்த இலவசத் திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது.
இதில் 30 நிறுவனங்கள் இணையவுள்ளன.

தற்போது Uber, Bolt, Deliveroo மற்றும் Pizza Pilgrims
ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளன. ஆனால், இலவசங்களை அளித்து
இளைஞர்களை ஈர்க்கும் இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது.

இதற்கிடையே தடுப்பூசி போட்டுக்கொள்ளச் செல்லும் இளைஞர்களுக்கு
இலவச சவாரியை Bolt நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு 100 டாலர்
ஊக்கத்தொகை அளிக்க மாகாண அரசுகளை ஜனாதிபதி பைடன்
அறிவுறுத்தியிருந்தார்.

ரஷ்யாவிலும் இலவசங்கள் அறிவிக்கப்பட்டன.

விலை மதிப்பில்லா உயிர்களைக் காப்பாற்ற ஒவ்வொரு நாட்டு
அரசும் அக்கறை காட்டி வருகின்றன. மனிதர்களும் ஆர்வமுடன்
தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டால் கொரோனாவை
விரைவில் உலகத்தைவிட்டே விரட்டிவிடலாம்.

Latest news
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!