Saturday, September 27, 2025

ஒரு நாளைக்கு 7,000 அடிகள் நடப்பது இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்

ஒரு நாளைக்கு 7,000 அடிகள் நடப்பதன் மூலம் உங்கள் இதயத்திற்கு கிடைக்கும் அற்புதமான நன்மைகள் என்ன என்பதை இதில் பார்ப்போம்.

தினசரி நடைபயிற்சி இரத்த அழுத்தம், இன்சுலின் உணர்திறன் மற்றும் கொழுப்பு அளவுகளை சிறப்பாக கட்டுப்படுத்தி, மாரடைப்பு மற்றும் இஸ்கிமிக் பக்கவாதத்திற்கான அபாயத்தை குறைக்க உதவுகிறது.

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் படி, தினமும் 7,000 அடிகள் நடப்பவர்களுக்கு, இறப்பின் அபாயம் குறைவு என தெரிய வந்துள்ளது.

Also Read : கடுமையான உடற்பயிற்சி திடீர் மாரடைப்பை ஏற்படுத்துமா? உண்மை என்ன?

நல்ல கொழுப்பை (HDL) அதிகரித்து கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. தினமும் நடப்பதன் மூலம் இருதயத்திற்கு நல்ல கொழுப்பு அளவை உயர்த்தி, நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது.

நடைபயிற்சி மூலம் கலோரிகளை எரித்து, உடல் எடை மற்றும் கொழுப்பை குறைக்க முடியும். இதய செயல்திறனை மேம்படுத்தி சுவாச சக்தியை உயர்த்தும்.

Also Read : 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவரா நீங்கள்? இந்த பிரச்சனைகள் உங்களுக்கு வரும்

மனச்சோர்வையும் மன அழுத்தத்தையும் குறைத்து மனநலத்தை மேம்படுத்தி இதயத்தை பாதுகாக்கிறது.
மேலும் சிறந்த தூக்கத்தையும் தரும்.

நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் தினமும் 7,000 அடிகள் நடந்தால் உடலுக்கும், மனதிற்கும் நல்ல ஆரோக்கியத்தை வழங்கும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News