மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் பேங்க் ஆப் பரோடா வங்கியில் 70 பவுன் நகை மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வங்கியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாய கூலித் தொழிலாளர்கள் கணக்கு வைத்துள்ளனர். அவர்கள் கடன் உதவி பெறுவதற்காகவும், குறைந்த வட்டி என்பதால், தங்க நகைகளை அடமானம் வைப்பது வழக்கம்.
இந்நிலையில், வங்கியில் அடமானம் வைக்கப்பட்டிருந்த 70 பவுன் தங்க நகைகள் மாயமாகிப் போனதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து காடுப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் உதவி மேலாளர் கணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.