மதுரை, பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், மது அருந்தி வந்த 3 பேர் உட்பட 7 மாடு பிடி வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
மாட்டுப் பொங்கலான இன்று, உலகப் புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி பெரு விமரிசையாகவும், கோலாகலமாகவும் தொடங்கியது. தயார் நிலையில் இருந்த மாடு பிடி வீரர்கள் அனைவரும் போட்டி தொடங்குவதற்கு முன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதில், மூன்று பேர் மது அருந்தி வந்திருந்தது தெரியவந்ததை அடுத்து, போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் சிலர் எடை குறைவு காரணம் காட்டியும் வெளியேற்றப்பட்டனர்.