Thursday, March 13, 2025

ஒன்றரை ஆண்டாக கல்லுரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 7 பேர்

குஜராத்தில் கல்லூரி மாணவியை ஒன்றரை ஆண்டாக 7 பேர் கொண்ட கும்பல் மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

குஜராத் மாநிலத்தில் சமூக வலைத்தளம் மூலம் கல்லூரி மாணவி ஒருவரிடம் இளைஞர் ஒருவர் நண்பராக பழகி வந்துள்ளார். பின்னாளில் அப்பெண்ணை நேரில் சந்தித்த அந்த இளைஞர், அவரை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை வைத்தே மிரட்டியபடி, மாணவியை இளைஞர் தனது நண்பர்களுக்கும் இரையாக்கி உள்ளார்.

சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளது. இது குறித்த அந்த பெண் காவல்துறையில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் தற்போது வரை குற்றவாளிகள் ஒருவர் கூட கைது செய்யப்படாமல் உள்ள நிலையில், இந்த வழக்கு பெரும் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது.

Latest news