உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் பலி

உத்தரகாண்ட் மாநிலத்தில் குப்தகாசி இருந்து கேதர்நாத் கோயிலுக்குச் செல்லும் ஆர்யன் ஏவியேஷன் ஹெலிகாப்டர், கௌரிகுண்ட் – சோன்பிரயாக் காட்டுப்பகுதியில் மோசமான வானிலை காரணமாக இன்று அதிகாலை 5:20 மணியளவில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானி மற்றும் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவும், மாநில மீட்பு அணி மற்றும் போலீசாரும் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த சம்பவத்திற்கு உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.

Related News

Latest News