Saturday, March 15, 2025

ஹோலி கொண்டாட்டம்: ரசாயன பொடி வீசியதில் 7 மாணவிகளுக்கு மூச்சு திணறல்

நாடு முழுவதும் நேற்று பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் பள்ளிக்கு செல்ல காத்திருந்த 7 மாணவிகள் மீது ரசாயன பொடி வீசப்பட்டது. அந்த மாணவிகள் பேருந்தில் ஏறிய பிறகும் அந்த கும்பல் மாணவிகள் மீது ரசாயன பொடியை வீசியுள்ளனர்.

அந்த வண்ணப்பொடியில் பசுவின் சாணம், முட்டை, ஃபீனைல் மற்றும் பிற இரசாயனங்கள் கலந்திருந்தாக கூறப்படுகிறது. இதனால் 7 மாணவிகளுக்கும் மூச்சுத் திணறல் மற்றும் மார்பில் கடுமையான வலி ஏற்பட்டது. உடனே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 7 பேரில் 4 மாணவிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று கூறப்படுகிறது.

மாணவிகள் மீது வண்ணம் பூசிவிட்டு பைக்கில் தப்பியோடிய அந்த கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

Latest news