கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா என்ற வைரஸ் பரவியது. இந்த வைரஸ் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பரவியது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியதாக செய்திகள் வந்துள்ளன.
ஜேஎன் – 1 எனப்படும் ஒமைக்ரான் பிஏ.2.86 என்ற துணை வேரியண்ட் மிக வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதிகபட்சமாக கேரளத்தில் 95 பேருக்கும், தமிழ்நாட்டில் 66 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.