பீகாரில் 65.6 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடைமுறை நிறைவுப் பெற்றுள்ளது. அதன்படி, பீகாரில் 65.6 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த 22 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
ஒரு லட்சத்து இருபதாயிரம் வாக்காளர்கள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவில்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.