கடந்த 2022ம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. கலவரம் தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தினர்.
பள்ளி கலவரம் தொடர்பாக பள்ளி மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி, தாய்மாமன் செந்தில்முருகுன் மற்றும் 53 சிறார்கள் உட்பட 916 பேர் மீது வழக்குப் பதிந்து, 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி, கனியாமூர் தனியார் பள்ளி கலவர வழக்கில் 615 பேர் விசாரணைக்காக மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.