புதுடில்லியில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 60,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
டெல்லியில் அடுத்த மாதம் பிப்ரவரி 5ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து ஆம்ஆத்மி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுடில்லியில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 60,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
டில்லி மக்கள் கெஜ்ரிவாலுக்கு எதிரான மனநிலையில் இருக்கின்றனர். யமுனை நதி அசுத்தம் அடைய அவரே காரணம். பாஜக ஆட்சிக்கு வந்தால் யமுனையை சுத்தப்படுத்துவோம். தலைநகர் டில்லியில் மக்களுக்கு சுகாதாரமான குடிதண்ணீர் கிடைக்கவில்லை. மாதம்தோறும் மின்கட்டணம் உயர்ந்து கொண்டே செல்கிறது 8000 பஸ்கள் இருந்த நிலையில் தற்போது 2,500 பஸ்கள் மட்டுமே உள்ளன. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 15,000 பஸ்களை இயக்குவோம் என பாஜக கூறியுள்ளது.