மத்தியபிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டம் கொலரஸ் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக அழுது கொண்டிருந்துள்ளது.
குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் மந்திரவாதியிடம் அழைத்துசென்றுள்ளனர். அப்போது குழந்தையின் உடலில் ஆவி புகுந்துள்ளதாக மந்திரவாதி கூறியுள்ளார். இதையடுத்து நெருப்பை மூட்டி அதன்மேல் குழந்தையை தலைகீழாக கட்டி தொங்க விட்டுள்ளனர். நெருப்பின் வெப்பத்தால் குழந்தை அலறி துடித்துள்ளது.
இதையடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தையின் கண்பார்வை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.